பிரெஞ்சு அரசியலமைப்பு சட்டத்தில் கருக்கலைப்பு தொடர்பான விதிகள்
March 9 , 2024 526 days 427 0
பிரான்சு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை உள்ளடக்கும் மசோதாவிற்கு பிரான்சு நாட்டின் சட்டமியற்றுபவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையானது, பிரான்சு நாட்டினை அதன் அடிப்படைச் சட்டத்தில் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான வெளிப்படையான பாதுகாப்பை (உரிமையினை) வழங்கும் உலகின் முதல் நாடாக மாற்றியுள்ளது.
கருக்கலைப்பு செய்வதற்கான பெண்ணின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 34வது சட்டப்பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவினை பிரான்சு அரசு ஏற்கனவே ஏற்றுக் கொண்டது.
1974 ஆம் ஆண்டு முதல் பிரான்சு நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.