TNPSC Thervupettagam

பிரேசிலில் காபி தோட்டங்களினால் ஏற்படும் காடழிப்பு

October 30 , 2025 16 hrs 0 min 22 0
  • "Wake Up and Smell the Deforestation: Coffee’s Destruction of Brazilian Forests and its Future" என்ற அறிக்கையானது காபி வாட்ச் என்ற காபி உற்பத்தியின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களின் மீது கவனம் செலுத்தும் ஓர் இலாப நோக்கற்ற அமைப்பினால் வெளியிடப் பட்டது.
  • 2001 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிரேசிலின் அட்லாண்டிக் காடுகளில் 312,803 ஹெக்டேர் பரப்பிலான காடுகளின் இழப்புக்கு காபி சாகுபடி நேரடி காரணமாக அமைந்தது.
  • அட்லாண்டிக் காடுகள் ஒரு காலத்தில் சுமார் 1.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பில் பரவியிருந்தது ஆனால் இன்று அது 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
  • பிரேசில் உலகின் காபியில் சுமார் 40 சதவீதத்தை வழங்குகிறது ஆனால் காடுகள் இழப்பு இந்தத் தொழில்துறையின் நீண்டகால நம்பகத் தன்மையை அச்சுறுத்துகிறது.
  • ஈரப்பதத்தைச் சிறப்பாகத் தக்க வைத்துக் கொள்கிறது என்றாலும் காபி சாகுபடி பகுதிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவான வேளாண் சார் காடுகள் பயன்படுத்தப் படுகின்றன என்பதோடு மேலும் பிரேசிலின் அரபிகா நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு 2050 ஆம் ஆண்டில் இழக்கப்படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்