பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு நாடுகளுக்கான பொதுவான பணம்
March 20 , 2023 888 days 388 0
பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு நாடுகளும் பொதுவான பணத்தினை உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளன.
பிரேசில் பரிந்துரைத்த புதியப் பணமானது "சுர்" (தெற்கு) என அழைக்கப்படும்.
இது பிராந்திய வர்த்தகத்தை அதிகரிப்பதோடு, அமெரிக்க டாலரைச் சார்ந்திருக்கும் நிலையினைக் குறைக்கும்.
இது முதலில் பிரேசிலிய ரியல் மற்றும் அர்ஜென்டினா பெசோ ஆகியவற்றிற்கு இணையாக புழக்கத்தில் இருக்கும்.
ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவிலும் புழக்கத்தில் உள்ள இந்த நாணய அமைப்பானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய நாணய முறையான யூரோ, டாலர் மதிப்பில் அடிப்படையில் மதிப்பிடப் படும் போது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 14 சதவீதத்தைக் கொண்டுள்ளது.