பிரேமச்சந்திரன் – அங்கீகரிக்கப்பட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்
August 3 , 2025 126 days 141 0
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரேமச்சந்திரனை அங்கீகரிக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு உறுப்பினராக என சபை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க பரிந்துரைத்துள்ளார்.
மக்களவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் 9வது பிரிவின் கீழ் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த விதியின் படி, சபாநாயகர் என்பவர் உறுப்பினர்களில் இருந்து 10 பேருக்கு மிகாத தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் சபாநாயகர் கோரும் போது அல்லது சபாநாயகர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் கோரும் போது, அவர்களில் எவரும் சபைக்குத் தலைமை தாங்கலாம்.