TNPSC Thervupettagam

பிரையம் பாரதியென்சிஸ்

July 12 , 2021 1445 days 600 0
  • பஞ்சாபின் பத்தின்டாவிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் தாவரவியலாளர் குழு ஒன்று கிழக்கு அண்டார்டிகாவில் ஒரு புதிய வகை தாவர இனப் பாசி ஒன்றைக் கண்டறிந்து உள்ளது.
  • இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபெலிக்ஸ் பாஸ்ட் என்பவர் 2016/17 ஆம் ஆண்டில் இந்திய அண்டார்டிக் திட்டத்திற்கான தனது ஆய்வின் போது அதன் லார்செமான் மலைகளிலுள்ள பாரதி ஆராய்ச்சி மையத்தின் அருகே உள்ள பாறைகளின் மீது இந்த பாசிகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
  • தாவரவியலாளர்கள் இதற்கு பிரையம் பாரதியென்சிஸ்எனப் பெயரிட்டுள்ளனர்.
  • இந்திய அண்டார்டிக் திட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட முதல் மற்றும் ஒரே ஒரு தாவர இனம்பிரையம் பாரதியென்சிஸ்என டாக்டர் பாஸ்ட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்