பழங்குடியினத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பகவான் பிர்சா முண்டா அவர்களின் 125வது நினைவு தினம் ஆனது சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது என்பதோடு இது 'பாலிதான் திவாஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.
அவர் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று, தற்போதைய ஜார்க்கண்டில் உள்ள உலிஹாட்டு கிராமத்தில் பிறந்தார்.
அவரது பிறந்த நாள் ஆனது ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் (பழங்குடியினர் பெருமை தினம்) என்று அனுசரிக்கப்படுகிறது.
1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் "பெருங்கலகம்" அல்லது பெரும் கிளர்ச்சி என்று பொருள் படும் உல்குலனை வழி நடத்தியதற்காக பிர்சா முண்டா மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர்.
அவர் பழங்குடியினச் சமூகங்களால் 'தார்த்தி ஆபா' அல்லது 'பூமியின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
1900 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் தேதியன்று ராஞ்சி சிறையில் அவர் உயிரிழந்த போது அவரது வயது 25 ஆகும்.