TNPSC Thervupettagam

பிறப்பு மற்றும் இறப்புகளின் அனைத்துப் பதிவு

August 25 , 2025 3 days 23 0
  • பிறப்பு மற்றும் இறப்புகளின் அனைத்துப் பதிவை அடைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார்.
  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளும் பிறப்பு மற்றும் இறப்புகளின் 'பதிவாளர்களாக' அறிவிக்கப்பட்டுள்ளன.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969 என்பதின் கீழ் மருத்துவமனைகள் 21 நாட்களுக்குள் நிகழ்வைப் புகாரளிக்க வேண்டும்.
  • 2023 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969, RGI இணைய தளத்தில் பிறப்பு மற்றும் இறப்புகளை நிகழ்நேரத்தில் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குகிறது.
  • முன்னதாக, மாநிலங்கள் தங்கள் சொந்த தரவுத்தளத்தைப் பராமரித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் RGI அலுவலகத்துடன் புள்ளி விவரங்களைப் பகிர்ந்து கொண்டன.
  • RGI உடனான தரவுத் தளத்தை வாக்காளர் பட்டியல்கள், தேசிய மக்கள் தொகை பதிவேடு, ரேஷன் அட்டைகள் மற்றும் சொத்துப் பதிவுகளைப் புதுப்பிக்கப் பயன்படுத்தலாம்.
  • அக்டோபர் 1, 2023 முதல், டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் என்பது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு வேலைகள் மற்றும் திருமணப் பதிவு போன்ற பல்வேறு சேவைகளுக்கான பிறப்புத் தேதியை நிரூபிக்கும் ஒற்றை ஆவணமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்