பிறப்பு, இறப்புப் பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று இந்தியத் தலைமைப் பதிவாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் ஆதார் அட்டையானது மக்களால் தானாக முன்வந்து வழங்கப் பட்டால், அது எந்த ஆவணத்திலும் அச்சிடப்படக் கூடாது அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய எந்த தரவுதளத்திலும் முழு வடிவத்தில் சேமிக்கப்படக் கூடாது என்றும் கூறப்பட்டு உள்ளது.
மேலும், வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும், மொபைல் இணைப்புகளைப் பெறுவதற்கும், பள்ளிச் சேர்க்கைக்கும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க முடியாது.
வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டி ஆதார் மற்றும் நிரந்தரக் கணக்கு எண்ணை (Permanent Account Number - PAN) இணைப்பது கட்டாயமாகும்.