பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான புதிய விதிகள்
August 16 , 2025
2 days
38
- தமிழ்நாடு அரசானது, 2025 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு விதிகளை அறிவித்துள்ளது.
- இந்தப் புதிய விதிகள், 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய விதிகளின் தொகுப்பிற்கு மாற்றாக அமைகின்றன.
- பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள் சுருக்க வடிவங்கள் எதுவும் இல்லாமல் குறிப்பிட்ட வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- 30 நாட்களுக்குப் பிறகு, ஆனால் ஓராண்டிற்குள் தெரிவிக்கப்பட்டால், தாசில்தாரர்கள் தற்போது கிராம பஞ்சாயத்துகளில் பதிவுகளை அங்கீகரிக்க முடியும்.
- முன்னதாக, அத்தகைய அனுமதிகள் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரால் வழங்கப் பட்டன.
- பதிவுச் சான்றிதழ்கள் தற்போது மின்னணு வடிவத்தில் வழங்கப்படலாம்.

Post Views:
38