TNPSC Thervupettagam

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மசோதா, 2026

August 4 , 2026 2 days 81 0
  • இம்மசோதா உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அவர்களால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது, தாமதமான பதிவுகளுக்கான கடுமையான விதிமுறைகள் மற்றும் படிநிலை அடிப்படையிலான ஒப்புதல் செயல்முறையை உருவாக்க, 1969-ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தை (2023-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டவாறு) திருத்துகிறது.
  • தற்போதைய சட்டத்தின்படி, ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு அது குறித்த தகவல் பதிவாளரிடம் அளிக்கப்பட்டால், அதைப் பதிவு செய்ய ஒரு தனிப்பட்ட உத்தரவு தேவைப்படுகிறது.
  • அத்தகைய உத்தரவை (i) மாவட்ட நீதித்துறை நடுவர் (District Magistrate), (ii) உட்கோட்ட நீதித்துறை நடுவர் (Sub-divisional Magistrate) அல்லது (iii) மாவட்ட நீதித்துறை நடுவரால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நீதித்துறை நடுவர் (Executive Magistrate) ஆகியோர் பிறப்பிக்கலாம்.
  • தகவலின் துல்லியத்தன்மையைச் சரிபார்த்த பின்னரும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பின்னரும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
  • ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலான தாமதம் ஏற்படும் பட்சத்தில், 'முதல் வகுப்பு நீதித்துறை நடுவர்' (Judicial Magistrate of the First Class) மட்டுமே அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்று இம்மசோதா வகை செய்கிறது.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம், தாமதத்தின் கால அளவைப் பொறுத்து இரண்டு நிலைகளைக் கொண்ட ஒப்புதல் நடைமுறையை அறிமுகப்படுத்துகிறது.
  • தற்போதைய சட்டத்தின்படி, பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்; மேலும், இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் ஒரு தனிநபருக்குச் சட்டப்பூர்வ அடையாளத்தை அளிக்கிறது.
  • தாமதமான பதிவுக்கான நடைமுறைகளை மேலும் கடுமையாக்கவும், பிறப்பு மற்றும் இறப்புகள் குறித்த தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிப்பதை ஊக்குவிக்கவும் இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்