மத்திய அரசு தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தைத் (National Commission for Backward Classes - NCBC) துவக்கி வைத்தது.
அந்த அமைப்பிற்கு அரசியலமைப்பு தகுதி நிலையை வழங்கிடுவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்திய பிறகு இது செயலற்றதாக மாறிய இரண்டு ஆண்டுகள் கழித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தப் புதிய ஆணையம் பகவான் லால் சாஹ்னியைத் தலைவராகக் கொண்டது. இதன் மற்ற உறுப்பினர்கள் பின்வருமாறு
கௌசலேந்திர சிங் படேல்
சுதா யாதவ்
அசாரி தலோஜ்
பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆணையங்களுக்கு இணையாக இந்தப் புதிய ஆணையம் அரசியலமைப்பில் விதி 338B-யில் குறிப்பிடப்பட்டிக்கின்றது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தேசியப் பட்டியலில் சாதிகளை சேர்த்தல் மற்றும் விலக்குதல் என்று முன்பிருந்த வரையறுக்கப்பட்ட நிலைமைக்கு எதிராக தற்போது இந்த ஆணையம் அவர்களின் குறைகளை கேட்க முடியும்.