TNPSC Thervupettagam

பிலிப்பைன்ஸ் கழுகு

February 25 , 2026 2 hrs 0 min 34 0
  • "குரங்கு உண்ணும் பறவை" என்று பிரபலமாக அறியப்படுகிற பிலிப்பைன்ஸ் கழுகு உலகின் மிகப்பெரிய மற்றும் அரிதான கழுகுகளில் ஒன்றாகும்.
  • இது IUCN அமைப்பால் மிகவும் அருகி வரும் இனமாக வகைப் படுத்தப்பட்டுள்ளது என்பதோடு இது 500க்கும் குறைவான முதிர்ந்த உயிரினங்கள் காடுகளில் மட்டுமே எஞ்சியுள்ளது.
  • இது ஒரு மேல்மட்ட அளவு வேட்டையாடுபவராகச் செயல்படுகிறது மற்றும் குரங்குகள், பறக்கும் அணில்கள், புனுகுப்பூனைகள், வௌவால்கள், பாம்புகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை உண்பதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கிறது.
  • இந்த இனம் பிலிப்பைன்ஸில் உள்ள முதன்மை டிப்டெரோகார்ப் காடுகளைச் சார்ந்து உள்ளது ஆனால் காடழிப்பு, மரம் வெட்டுதல், விவசாயம் மற்றும் சுரங்கம் காரணமாக அதன் வாழ்விடம் சுருங்கி வருகிறது.
  • பிலிப்பைன்ஸின் தேசியப் பறவையான இது வலிமை மற்றும் மீள்தன்மையைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்