July 27 , 2024
291 days
383
- ராஜஸ்தானில் பில் பழங்குடியினச் சமூகத்தினரின் தனி மாநிலக் கோரிக்கை வலுத்து வருகிறது.
- நான்கு மாநிலங்களில் இருந்து 49 மாவட்டங்களைப் பிரித்து "பில் பிரதேசம்" என்ற தனி மாநிலம் வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
- 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 1.7 கோடி பில் சமூகத்தினர் உள்ளனர்.
- அவர்களின் மிகவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகையானது மத்தியப் பிரதேசத்தில் சுமார் 60 லட்சம் ஆகும்.
- அதைத் தொடர்ந்து குஜராத்தில் 42 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 41 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 26 லட்சம் பேரும் உள்ளனர்.
- பில் பிரதேசத்திற்கான கோரிக்கையானது 1913 ஆம் ஆண்டிலிருந்து முன்வைக்கப் பட்டு வருகிறது.

Post Views:
383