பிளாக்செயின் தொழில்நுட்பம் – சான்றிதழ்கள்
July 22 , 2021
1474 days
1073
- பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி ஆவணங்களை வெளியிடும் நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுக்கவுள்ளது.
- இதன் மூலம் இந்திய நாடானது இவ்வாறு செயல்படுத்தும் உலகின் நான்காவது நாடாக மாறவுள்ளது.
- தற்போது கல்வி ஆவணங்களுக்காக பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடுகள் பஹ்ரைன், மால்டா மற்றும் சிங்கப்பூர் ஆகியனவாகும்.
- பிளாக்செயின் என்பது பரவலாக விநியோகிக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை பேரேடாகும் (distributed digital transaction ledger).
- பல்வேறு கணினி அமைப்புகளில் தரவு அல்லது பதிவுகளின் ஒரே மாதிரியான நகல்களைப் பராமரிக்க இது அனுமதிக்கிறது.
- ஆவணங்களை மோசடி செய்வது என்பது பல்வேறு கல்வி மற்றும் இதர பிற நிறுவனங்களுக்குக் கடுமையான ஒரு சிக்கலாக உள்ளது.

Post Views:
1073