அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பிளிங்கன் சமீபத்தில் தனது முதல் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் S. ஜெய்சங்கருடனான விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிளிங்கன் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தார்.
ஆப்கனிஸ்தானின் நிலை, இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஈடுபாடு மற்றும் கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தப் பேச்சு வார்த்தையில் இடம் பெற்றன.