பீகார் மாநிலத்தில் நவம்பர் 06 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்பதோடு அதற்கான முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதியன்று அறிவிக்கப் படும்.
தேர்தல் ஆணையம் ஆனது, 17 புதிய சீர்திருத்தங்களை முதலில் பீகாரிலும், பின்னர் நாடு தழுவிய அளவிலும் செயல்படுத்தியுள்ளது.
வாக்காளர் வரம்பானது, ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் என்ற முந்தைய வரம்பில் இருந்து 1,200 வாக்காளர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் வாக்குச்சாவடிகள் ஆனது, தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு வெளியே மட்டுமே அனுமதிக்கப்படும்.
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீத இணையதள ஒளிபரப்பு பரவல் நடவடிக்கை செயல்படுத்தப்படும்.
வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் மற்றும் பெரிய அளவிலான வரிசை எண்களைச் சேர்ப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குச்சீட்டு வழி காட்டுதல்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
படிவம் 17C மற்றும் EVM முடிவுகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருந்தால், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை (VVPAT) சீட்டுகளை கட்டாயமாக எண்ணுதல் மற்றும் சரிபார்த்தல் அமல்படுத்தப்படும்.