TNPSC Thervupettagam

பீகார் சிறப்பு தீவிரமான வாக்காளர் பட்டியல் திருத்தம்

July 18 , 2025 9 days 85 0
  • தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளைத் தொடர தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  • இருப்பினும், இந்தத் திருத்தத்தின் போது ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய அடையாள ஆவணங்களை ஏற்றுக் கொள்வது குறித்து ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியது.
  • தீவிர திருத்தம் என்பது வீடு வீடாகக் கணக்கெடுப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலை முழுமையாகவும், புதியதாகவும் தயாரிப்பதை உள்ளடக்குகிறது.
  • ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்புகள் எதையும் எடுக்காமல், கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தகுதியான வாக்காளர்களை தகுதித் தேதியின்படி பதிவு செய்கிறார்கள்.
  • "சிறப்பு தீவிர திருத்தம்" (SIR) என்ற பெயரிடல் ஆனது, 1950 ஆம் ஆண்டு சட்டத்தின் 21(3)வது பிரிவின் கீழான அதன் விருப்புரிமை அதிகாரங்களை ECI பயன்படுத்துகிறது என்பதைக் குறிக்கிறது.
  • இது ECI "பொருத்தமாக இருக்கும் என்று கருதும் வகையில்" வாக்காளர் பட்டியலைத் திருத்த அனுமதிக்கிறது.
  • முன்னதாக நாட்டின் அனைத்து அல்லது சில பகுதிகளிலும், வாக்காளர் பட்டியல்களின் மீதான தீவிர திருத்தங்கள் 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.
  • 1977 ஆம் ஆண்டு மொஹிந்தர் சிங் கில் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கான இடையிலான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்காக என்று 324வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தின் பரந்த அதிகாரங்களை உறுதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்