TNPSC Thervupettagam

பீனிக்ஸ் சிற்றினங்கள் திட்டம்

October 13 , 2026 9 days 110 0
  • Re:wild மற்றும் Bezos Earth Fund ஆகியவை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று பீனிக்ஸ் சிற்றினங்கள் திட்டத்தைத் தொடங்கின, 100 அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களை மீட்பதற்கு 200 மில்லியன் டாலர்களை வழங்குவதாக உறுதியளித்தன.
  • இந்தத் திட்டம் பாலூட்டிகள், நீர்நிலவாழ் உயிரினங்கள், ஊர்வன, பறவைகள், மீன்கள், முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் உட்பட 30 நாடுகளில் உள்ள 100 உயிரினங்களை உள்ளடக்கியது.
  • Bezos Earth Fund மற்றும் Re:wild தலா 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாக உறுதியளித்தன; Re:wild நிறுவனம் ஆனது நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவால் இணைந்து நிறுவப்பட்டது.
  • பழங்குடியினர், உள்ளூர் சமூகங்கள், அறிவியலாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்; இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிற்றினங்கள் உயிர்வாழ்வு ஆணையம் (Species Survival Commission) இதற்கான உலகளாவிய அறிவுப் பங்காளியாகும்.
  • ஒவ்வொரு சிற்றினமும் ஐந்து ஆண்டுகள் ஆதரவைப் பெறும், உயிரினங்களின் மக்கள்தொகை மீட்பு மற்றும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதன் மூலம் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.
  • கோல்டன் கிரவுன்ட் சிஃபாக்கா (மிக அருகி வரும் இனம்), நைட் பெரட் (மிக அருகி வரும் இனம்), மலேயன் எறும்புண்ணி (மிக அருகி வரும் இனம்), விசயன் வார்டி பன்றி (மிக அருகி வரும் இனம்), பௌமவுத் கிட்டார்ஃபிஷ் (மிக அருகி வரும் இனம்) மற்றும் சார்கோ அசுல் பப்ஃபிஷ் (இயற்கை வாழிடத்தில் அழிந்துவிட்ட இனம்) ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்