இராணுவத்தின் மின்னணு மற்றும் எந்திரவியல்பொறியாளர்கள் குழுவானது (Electronics and Mechanical Engineers - EME) “பீஹைவ் திட்டம்” என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
குறிக்கோள்: இது படைப் பிரிவின் அதிக இயந்திரமயமாக்கத்தை அடைவதையும் அதன் அனைத்துப் பட்டறைகளையும் நிகழ்நேரத் தரவுப் பகுப்பாய்வுத் திறன்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த சிறந்த அமைப்புடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
WASPன் (Workshop Honeybees - ஹனிபீஸ் பட்டறை) கீழ், இராணுவப் பட்டறைகள் ஏற்கனவே தானியங்கி மயமாக்கப் பட்டுள்ளன.
பீஹைவ் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த WASPகள் அல்லது பட்டறைகள் மையப்படுத்தப்பட்ட பீஹைவ்களாக செயல்பட இருக்கின்றன.
இராணுவத்தின் உபகரணங்களின் நிகழ்நேரத் தரவானது (பழுதுபார்ப்பு, புதுப்பித்தல் மற்றும் மாற்றியமைத்தல்) ஒரே இடத்தில் கிடைக்கும்.
பீஹைவ் திட்டமானது செப்டம்பர் 1 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 15க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
EME பற்றி
EME என்பது இந்திய இராணுவத்தின் ஆயுத மற்றும் சேவைப் பிரிவாகும்.
இது ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, ஆய்வு மற்றும் மறுசீரமைப்புக்குப் பொறுப்பாக இருக்கின்றது.
இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1943 இல் உருவாக்கப்பட்டது. இது 2001 ஆம் ஆண்டில் அதன் தற்போதைய பெயருக்கு மறுபெயரிடப்பட்டது.