2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொட்டலங்களின் மீது உள்ள படம் மாற்றப்படும்.
வாய்ப் புற்றுநோயால் தனது தாடையின் ஒரு பகுதியையும் பிற பகுதிகளையும் இழந்த ஒரு மனிதனின் உருவத்தால் தற்போதைய படம் மாற்றப்படும்.
புதிய படத்தைத் தவிர, ‘புகையிலை ஒரு கொடிய மரணத்தை ஏற்படுத்துகின்றது’ என்ற சுகாதார எச்சரிக்கையும் புகையிலையிலிருந்து மீள்வதற்கான உதவியை நாடும் ஒரு எண்ணும் (1800-11-2356) அந்தப் பொட்டலங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது.
அவர்கள் அனைத்துப் புகையிலைப் பொருள்களிலும் 85 சதவிகிதப் பகுதியில் இந்த படத்தைக் காட்சிப்படுத்த இருக்கின்றனர்.