புகையிலை உபயோகிப்போர் அதிலிருந்து மீள்வதற்கான உதவி எண்
October 3 , 2018 2632 days 913 0
இந்தியாவானது, அனைத்து புகையிலை தயாரிப்புகளின் பொட்டலங்களிலும் புகையிலை உபயோகிப்பிலிருந்து மீள்வதற்கான உதவி எண் 1860-11-2356 என்ற எண்ணை செப்டம்பர் 01, 2018-முதல் வெளியிட்டுள்ளது.
ஆசியாவில் தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து புகையிலை பொருட்கள் உபயோகத்திலிருந்து மீள்வோர்க்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உதவி எண்ணை உடைய 4வது நாடாக இந்தியா மாறியுள்ளது.
மேலும் இந்த உதவி எண்ணைத் தொடங்கியுள்ள ஒரே சார்க் நாடு இந்தியாவாகும்.