உலக சுகாதார அமைப்பு (WHO) புகையிலை பயன்பாட்டில் உலகளாவியப் போக்குகள் 2000–2024 மற்றும் கணிப்புகள் 2025–2030 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
13 முதல் 15 வயது வரையிலான 15 மில்லியன் குழந்தைகள் உட்பட உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான பேர் புகையிலை புகைக்கின்றனர்.
கிடைக்கக் கூடிய தரவுகளைக் கொண்டு உலக நாடுகளில், வயது வந்தவர்களை விட ஒன்பது மடங்கு அதிகமாக சிறார்கள் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.
2000 ஆம் ஆண்டில் 1.38 பில்லியனாக இருந்த உலகளாவிய புகையிலைப் பயனர்கள் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாகக் குறைந்துள்ளது.
உலகளவில் வயது வந்த ஐந்து நபர்களில் ஒருவர் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புகையிலை பயன்பாடு பரவலாக உள்ளது.
2010 ஆம் ஆண்டில் 11% ஆக இருந்த பெண்கள் மத்தியில் புகையிலை பயன்பாடு 2024 ஆம் ஆண்டில் 6.6% ஆகக் குறைந்தது, அதே நேரத்தில் ஆண்களில் புகையிலை பயன்பாட்டில் குறைவானது மெதுவாக உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆனது 2000 ஆம் ஆண்டில் ஆண்கள் மத்தியில் 70% ஆக இருந்த புகையிலை பயன்பாட்டை 2024 ஆம் ஆண்டில் 37% ஆகக் குறைத்தது என்ற நிலையில் இது உலகளாவியச் சரிவில் பாதி அளவிற்குப் பங்களித்தது.