புதிதாக கண்டறியப்பட்டுள்ள திராவிடா பேரின மண்புழுக்கள்
August 22 , 2017 2833 days 1123 0
மேற்கு தொடர்ச்சி மலைகளின் கேரளப் பகுதியில் , இரண்டு வகைப் பழங்கால மண்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வகை மண்புழுக்களுக்கு திராவிடா பாலிடைவர்டிகுலேடா (Drawida polydiverticulata) மற்றும் திராவிடா டோமாசி (Drawida thomasi) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் திராவிடா பேரினத்தைச் சேர்ந்த பதினாறு மண்புழுக்கள் உள்ளன. இதில் பத்து திராவிடா மண்புழுக்கள் தனித்தன்மை வாய்ந்தவை ஆகும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் திராவிடா பேரினங்களைச் (Drawida genus) சேர்ந்த 73 இனங்கள் வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றது. திராவிடா பேரினங்கள் பெருக்கத்தில் கேரள மாநிலம் பெரும் பங்கு வகிக்கின்றது.
திராவிடா பாலிடைவர்டிகுலேடா
திராவிடா பாலிடைவர்டிகுலேடா மண்புழுக்களின் முன் பகுதியில் டைவர்டிகுழுமஸ் (diverticulums) எனும் பிரத்யேக பிளவுத்துண்டுகள் அமைந்திருக்கும். திராவிடா பேரினங்களில் இது தனித்துவமான உடல் உறுப்பு ஆகும்.
காணப்படும் இடங்கள் :
மூணாறு பகுதியில் உள்ள சோலைக் காடுகள்
எரவிக்குளம் தேசியப் பூங்கா
பாம்பாதூன் தேசியப் பூங்கா (Pampadun Shola National Park)
சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம்
திராவிடா தோமாசி
காணப்படும் இடங்கள் :
கோழிப்பாறை நீர்வீழ்ச்சி அருகில் உள்ள காக்கதம்போயில் (Kakkadampoyil) பகுதிகள்