புதிதாக தொழில் தொடங்குதல் மற்றும் புத்தாக்க கொள்கை – தமிழ்நாடு
January 21 , 2019 2524 days 2029 0
தமிழ்நாடு அரசானது 2018-2023 ஆண்டிற்கான புதிதாக தொழில் தொடங்குதல் மற்றும் புத்தாக்க கொள்கையை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட புதிதாக தொழில் தொடங்குவோர்க்கான செயலாக்க மற்றும் புத்தாக்க சூழலியலை வழங்குவதையும் தமிழ்நாட்டை உலகளாவிய தொழில் தொடங்குவதற்கான புத்தாக்க மையமாக மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமானது தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கவும் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்குமான முதன்மை நிறுவனமாக செயல்படும்.
ஒரு முழு நேர அலுவலரை தலைமையாகக் கொண்ட தமிழ்நாடு தொழில் தொடங்குவோர் மற்றும் புத்தாக்க திட்டமானது (Tamil Nadu Startup and InnovaTION Mission-TAMSIM) தொழில் தொடக்கங்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான கொள்கைகளை மேற்பார்வையிடுகிறது.