இந்தியா தனது 'பரந்து விரிந்த கண்டத்திட்டுகளின்' ஒரு பகுதியாக, மத்திய அரேபியக் கடலில் தனது உரிமை கோரலை சுமார் 10,000 சதுர கி.மீ. வரை அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் சார் எல்லை தொடர்பாக பாகிஸ்தானுடனான நீண்டகால சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக அரசு தனது முந்தைய கோரலையும் மாற்றி அமைத்துள்ளது.
கடலோர நாடுகள் ஆனது, அவற்றின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் வரை பிரத்தியேகச் சுரங்க மற்றும் மீன்பிடி உரிமைகளை வழங்குகின்ற ஒரு 'பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தைக்' கொண்டுள்ளன.
இது தவிர அத்தகைய நாடுகள், கண்டத் திட்டுகளின் எல்லை வரம்புகள் குறித்த ஆணையம் (CLCS) எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பிடம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடிந்தால், கடல் பரப்பில் அதிக பரப்பளவின் மீது உரிமையைக் கோரலாம்.
இதற்காக உரிமை கோரப் பட்டப் பகுதியானது அந்த நாட்டின் நிலப்பரப்பிலிருந்து கடல் படுகை வரை இடைவெளி இல்லாமல் நீண்டு காணப்பட வேண்டும்.
இந்தியா ஏற்கனவே 12 கடல் மைல் அளவிலான பிராந்திய கடலையும், அடிப்படை வரம்பு எல்லையிலிருந்து அளவிடப்பட்ட பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களின் 200 கடல் மைல்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவானது வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரேபியக் கடல் வரை பரந்து விரிந்த கடல் பரப்புகளில் 2009 ஆம் ஆண்டில் தனது முதல் உரிமை கோரலை முன்வைத்தது.
அரேபியக் கடலில் உள்ள கண்டத்திட்டுகள் மீதான இந்திய உரிமை கோரல்களின் சில பகுதிகள் ஓமன் நாட்டின் கோரல்களுடன் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுகின்றன.
இருப்பினும், இரு நாடுகளும் 2010 ஆம் ஆண்டு முதல் ஓர் ஒப்பந்தத்தில் இணைந்து உள்ளன எனவே அவற்றுக்கிடையேயான கண்டத் திட்டு ஆனது சர்ச்சைக்குரியதாக அல்லாமல், இன்னும் எல்லை வகுக்கப்படாமல் உள்ளது.
ஆனால், குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச்சின் சதுப்பு நிலங்களில் உள்ள சர் க்ரீக் (கடற்கழி) என்ற நீர்ப் பகுதி தொடர்பாக பாகிஸ்தானுடன் ஒரு தகராறு என்பது நிலவி வருகிறது.