புதியவகை – நோய் நுண்ணுயிர் எதிரிகள் - ஒடிலோர்ஹாப்டின்ஸ்
April 19 , 2018 2662 days 944 0
மருந்து எதிர்ப்புத் தன்மையை (drug resistance) எதிர்க்கும் திறனுடைய ஒடிலோர்ஹாப்டின்ஸ் (odilorhabdins) அல்லது ODLs என்றழைக்கப்படும் புதிய ஆண்டிபயாடிக் (நுண்ணுயிர்க்கொல்லிகள்) வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உணவுக்காக பூச்சிகளைத் தொற்றி வாழ்கின்ற மண்வாழ் நூற்புழுக்களில் காணப்படுகின்ற இணைந்து வாழும் பாக்டீயாக்களினால் (symbiotic bacteria) இந்த புதிய வகை ஆண்டிபயாடிக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நூற்புழுவில் உள்ள பாக்டீரியாவானது பூச்சிகளைக் கொல்வதற்கு நூற்புழுவிற்கு உதவுகின்றது. தனக்கான போட்டி பாக்டீரியங்களை விலக்கி வைப்பதற்காக ஆன்டிபயாடிக்குகளை இந்த பாக்டீரியங்கள் சுரக்கின்றன.
பல்வேறு பயனுள்ள மருத்துவ நுண்ணுயிரிகள் போல ODL நுண்ணுயிரிகள் ரைபோசோம்களை இலக்கிட்டு செயல்படுகின்றன.
வேறு எந்த எதிர் நுண்ணுயிரிகளும் பயன்படுத்தாத ரைபோசோம்களின் பகுதியில் ODL எதிர் நுண்ணுயிரிகள் பிணைந்து செயல்படுகின்றன. இந்த வகையில் ODL எதிர் நுண்ணுயிரிகள் தனித்துவம் வாய்ந்தவை ஆகும்.