TNPSC Thervupettagam

புதிய ஆளுநர்கள் நியமனம்

September 2 , 2019 2141 days 643 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.

தெலுங்கானா

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

ராஜஸ்தான்

கல்ராஜ் மிஸ்ரா

மகாராஷ்டிரா

பகத் சிங் கோஷ்யாரி

இமாச்சலப் பிரதேசம்

பண்டாரு தத்தாத்ரேயா

கேரளா

ஆரிஃப் முகமது கான்

  • 2010 ஆம் ஆண்டு முதல் பிரிக்கப்படாத ஆந்திராவின் ஆளுநராக இருந்த ஈ எஸ் எல் நரசிம்மன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பைக் கவனித்து வந்தார்.
  • அவருக்குப் பதிலாக டாக்டர் தமிழிசை ஆளுநராக பதவி ஏற்க இருக்கின்றார்.
  • தமிழ்நாட்டிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்மணி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவார்.
  • ஜோதி வெங்கடாச்சலம்  தமிழ்நாட்டில் இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.
  • அவர் கேரளாவின் ஆளுநராக இருந்தார் (1977 முதல் 1982 வரை).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்