TNPSC Thervupettagam

புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம்

February 20 , 2022 1242 days 1762 0
  • 2022-2027 ஆம் நிதியாண்டிற்கான "புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம்" என்ற ஒரு புதிய திட்டத்திற்குக் கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை மற்றும் 2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் வயது வந்தோருக்கான கல்வியைச் சீரமைப்பதை இந்தத் திட்டம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்குப் பயனளிக்கும்.
  • அரசாங்கம் இப்போது நாட்டில் "வயது வந்தோர் கல்வி" என்ற ஒரு வாக்கியத்திற்குப் பதிலாக 'அனைவருக்கும் கல்வி' என்ற ஒரு வாக்கியத்தைக் கொண்டு அதனை மாற்றி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்