ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் புதிய வகை உருகிய திரவப் புறக்கோள்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கோள்கள் பாறை கிரகங்களோ அல்லது நீர் உலகங்களோ அல்ல, மாறாக உருகிய மாக்மா குழம்பால் சூழப்பட்ட உலகளாவிய கடல்களைக் கொண்டுள்ளன.
பூமியிலிருந்து சுமார் 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள L 98-59 d என்ற கோள் இதற்கு ஒரு உதாரணமாகும் என்பதோடுஇதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 1,900°C என்ற மிக அதிக அளவில் உள்ளது.
இது ஹைட்ரஜன் சல்பைடு வாயு நிறைந்த மிகவும் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது என்பதோடுஇது ஒரு வலுவான பசுமை இல்ல விளைவையும் தீவிர நிலைமைகளையும் உருவாக்குகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு உருகிய சிலிகேட் பொருட்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் கோள்களின் மூன்றாவது வகையை அறிமுகப்படுத்துகிறது.