மஹி பன்ஸ்வாரா இராஜஸ்தான் அணுமின் நிலையத்திற்கு (MBRAPP) பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
சுமார் 42,000 கோடி ரூபாய் முதலீட்டை கொண்ட இந்தத் திட்டத்தில், நான்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 700 மெகாவாட் திறன் கொண்ட அழுத்த கன நீர் உலைகள் (IPHWR-700) இடம்பெறும்.
நாடு முழுவதும் பத்து ஒத்த 700 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகளை உருவாக்க இந்தியாவின் ஃப்ளீட் மோட் உத்தியின் (ஒரே நேரத்தில் பல்வேறு உலைகளைக் கட்டமைத்தல்) கீழ் MBRAPP உருவாக்கப்பட்டு வருகிறது.
இராஜஸ்தானின் பலோடியில் அமைக்கப்பட்டுள்ள RSDCL நோக் சூரிய சக்திப் பூங்காவையும் பிரதமர் திறந்து வைத்தார்.
இது NTPC நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட 735 மெகாவாட் திறன் உட்பட மொத்தம் 925 மெகாவாட் கொள்ளளவைக் கொண்டுள்ளது.
இந்த சூரிய சக்திப் பூங்கா ஆனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கப் பங்களிக்கும்.