மத்திய அரசானது, சமீபத்தில் புதிய ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழான 81.35 கோடி பயனாளிகளுக்கு 2023 ஆம் ஆண்டில் இலவச உணவு தானியங்களை வழங்க உள்ளது.
“ஒரே நாடு - ஒரே விலை - ஒரே ரேஷன்” என்ற குறிக்கோளினை நிறைவேற்றும் வகையில் இந்த மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் உள்ள 81.35 கோடி பயனாளர்களை உள்ளடக்கிய, மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள 67% மக்களுக்குப் பயனளிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.