புதிய கடற்படை நீர்மூழ்கி கப்பல்கள்
June 22 , 2019
2198 days
728
- ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவதற்கான, இந்திய யுக்திசார் பங்காளர்களை இறுதி செய்வதற்காக விருப்பத் தேவைகளின் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
- இவை இந்தியக் கடற்படையின் P-75 (I) திட்டத்தின் கீழ் கட்டப்படும்.
- மேலும் இவை யுக்திசார் கூட்டு மாதிரியின் (strategic partnership model-SPM) கீழ் கட்டப்படவுள்ளன.
யுக்திசார் கூட்டு மாதிரி
- இது “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தின் கீழ் உள்ள ஒரு முன்முயற்சியாகும்.
- இது இந்தியாவில் நீர்மூழ்கிக் கப்பல்களின் உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதன் கீழ் ஒரு தனியார் இந்திய நிறுவனமானது வெளிநாட்டின் அசல் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டு சேரும்.
- இதில் இந்திய நிறுவனங்களானது 51% உரிமையைக் கொண்டிருக்கும்
Post Views:
728