169 ஆண்டுகள் பழமையான காலனித்துவ கால 1856 ஆம் ஆண்டின் இந்தியக் கப்பல் சரக்கு ஏற்றல் பட்டியல் சட்டத்தை மாற்றியமைக்கின்ற 2025 ஆம் ஆண்டு கப்பல் சரக்கு ஏற்றல் பட்டியல் சட்டத்தை இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றியது.
கப்பல் ஆவணங்களில் தெளிவின்மையைக் குறைத்தல், வழக்காடல் அபாயங்களைக் குறைத்தல் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய சட்டமானது எளிமைப்படுத்தப்பட்ட சட்ட மொழியையும் கொண்டுள்ளது மற்றும் சிக்கலான விதிகளை மறுசீரமைக்கிறது.