அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறைகள் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக மேதா விஷ்ராம் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழு அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான அரசின் கொள்கைகள், நிதி ஒதுக்கீடுகள், ஆண்டு அறிக்கைகள் மற்றும் மசோதாக்களை ஆய்வு செய்கிறது.
துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், அமைச்சகங்கள் மற்றும் சட்ட முன்வரைவுகளை விரிவாக ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு உதவுகின்றன.
இக்குழுக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டு உள்ளதோடு இவை நிரந்தர நாடாளுமன்றக் குழுக்களாகச் செயல் படுகின்றன.
பெருநிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-க்கான கூட்டுக் குழுவின் தலைவராக சுதீர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருநிறுவனச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படுவதற்கு முன்பாக, அதன் விதிகளைப் படித்து ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் பைஜயந்த் பாண்டா, தேஜஸ்வி சூர்யா, டிம்பிள் யாதவ், மஹுவா மொய்த்ரா மற்றும் சுப்ரியா சுலே போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.