TNPSC Thervupettagam

புதிய கெளுத்தி மீன் இனம்

August 3 , 2026 2 days 45 0
  • ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள புதாபாலங்கா நதியில் சூடோலாகுவியா கைரி (Pseudolaguvia khairii) என்ற புதிய நன்னீர் கெளுத்தி மீன் இனம் கண்டறியப் பட்டு ள்ளது.
  • ஒடிசாவில் வனவிலங்குப் பாதுகாப்போடு தொடர்புடைய, ஆதரவற்று வளர்ந்த 'கைரி' (Khairi) எனும் ராயல் பெங்கால் பெண் புலியின் நினைவாகவே இப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
  • சூடோலாகுவியா கைரி, சூடோலாகுவியா பேரினம் மற்றும் சிலுரிஃபார்ம்ஸ் (கெளுத்தி மீன் குழு) வரிசையைச் சேர்ந்ததாகும்.
  • இந்த இனம் வேகமாக பாயும் நன்னீர் நதிகளுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட ஒரு சிறிய மலைநீரோடை கெளுத்தி மீன் ஆகும், மேலும் அதன் முதுகுப்புற துடுப்பின் அடிப்பகுதியில் உள்ள தனித்துவமான சதைப்பற்றுள்ள புடைப்பு மூலம் இது அடையாளம் காணப்படுகிறது.
  • கைரி 1970-களில் ஒடிசாவின் சிமிலிபால் காடுகளிலிருந்து மீட்கப்பட்டு, வனவிலங்கு பாதுகாவலரான சரோஜ் ராஜ் சௌத்ரி மற்றும் நிஹார் நளினி ஸ்வைன் ஆகியோரால் வளர்க்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்