TNPSC Thervupettagam
November 19 , 2026 13 hrs 0 min 45 0
  • 2026 QQ8 எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறிய புவி-அருகு சிறுகோளைப் பூமி தற்காலிகமாக ஒரு சிறு நிலவாகத் (mini-moon) தனது ஈர்ப்பு விசையால் ஈர்த்துள்ளது.
  • சுமார் 1–2 மீட்டர் அளவுள்ள இந்தச் சிறுகோள், ஹங்கேரிய வானியலாளர் கிறிஸ்டியன் சார்னெஸ்கியால் கண்டுபிடிக்கப்பட்டது; இது 2027-ஆம் ஆண்டில் தனது சுயாதீன சூரிய சுற்றுப்பாதைக்குத் திரும்புவதற்கு முன்பு, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பூமிக்கு அருகில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சிறு கோள் மையம் (MPC) இதனை ஒரு இயற்கையான பொருளாக வகைப்படுத்தியுள்ளது; இதன் மிக நெருக்கமான அணுகல் பூமியிலிருந்து சுமார் 5,68,000 கி.மீ தொலைவில் இருக்கும், இது சராசரி பூமி-நிலவு தூரத்தை விட சுமார் 1.5 மடங்கு அதிகமாகும்.
  • இது பூமிக்கு எந்த மோதல் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது; வளிமண்டலத்திற்குள் நுழைந்தால் முழுமையாக எரிந்துவிடும்.
  • சிறு நிலவு (mini-moon) என்பது பூமியின் 'ஹில் கோளத்திற்குள்' (Hill sphere) பூமியின் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாக ஈர்க்கப்படும் ஒரு புவி-அருகு சிறுகோளாகும்; அதே சமயம், போலி/அரை நிலவு (quasi-moon) என்பது பூமியை நேரடியாகச் சுற்றாமல், பூமியின் சுற்றுப்பாதையுடன் ஒத்திசைக்கப்பட்ட பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
  • இதற்கு முன்னர் 2020 CD3, 2020 SO மற்றும் 2024 PT5 ஆகியவை இவ்வாறு வருகை தந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்