இந்திய ராணுவம் 174 பக்கங்கள் கொண்ட ராணுவ சீருடைகள்-2026 கையேட்டை வெளியிட்டுள்ளதுடன் இது எட்டு ஆண்டுகளில் ஆடை விதிமுறைகளில் மேற்கொள்ளப் பட்ட முதல் விரிவான மாற்றத்தைக் குறிக்கிறது.
இந்தப் புதிய கையேடானது முறையான உடைகள், சடங்கு உடைகள், குளிர்கால வேலை உடைகள், சீர்படுத்தும் தரநிலைகள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான ஆடை விருப்பங்களை உள்ளடக்கியது.
இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான முறையான சிவில் ஆடையாக உள்நாட்டு பண்டி மேலங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு புதிய போர் மேலங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது 2029 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஜெர்சி அடிப்படையிலான குளிர்கால சீருடையான Dress 3A-ஐ படிப்படியாக மாற்றும்.
இந்தக் கையேடு அதிகாரப்பூர்வ பயன்பாட்டிலிருந்து "ராயல் / அரசுரிமை வாய்ந்த" உள்ளிட்ட காலனித்துவ காலத்திய பல சொற்களை நீக்குகிறது.
புதிய விதிகள் தீவிரமான சிகை அலங்காரங்கள், அங்கீகரிக்கப்படாத தாடிகள், வெளிப்படையாகத் தெரியும் மின்னணு சாதனங்கள், பச்சை குத்துதல் மற்றும் உடல் துளையிடுதல் ஆகியவற்றைத் தடை செய்கின்றன; மேலும் சீக்கிய வீரர்களுக்கு மட்டும் இதிலிருந்து குறிப்பிட்ட விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.