தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் கொளத்தூரில் உள்ள ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவிலில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பேரனான முதலாம் ராஜாதிராஜனுடன் தொடர்புடைய மூன்று புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு கல்வெட்டானது முதலாம் ராஜாதிராஜனின் (கி.பி. 1044-1052) ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
மற்றொரு கல்வெட்டு, இக்கோவில் பாண்டியர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலங்களிலும் வழக்கில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
இக்கல்வெட்டுகள் கோவில் மற்றும் சோழப் பேரரசு பற்றிய புதிய வரலாற்றுச் சான்றுகளை வழங்குகின்றன.
இந்த ஆய்வின் போது கோவிலுக்கு அருகே தொல்லுயிர் படிமங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.