February 28 , 2026
18 days
69
- இந்திய விலங்கியல் ஆய்வக அறிவிலாளர்கள் கிழக்கு இமயமலையில் லெபிடோகாம்பா சிக்கிமென்சிஸ் என்ற புதிய டிப்ளூரா இனத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.
- டிப்ளூரா என்பவை ஹெக்சபோடா வகுப்பின் கீழ் பழமையான ஆறுகாலிகள் ஆகும்.
- இவை மண்ணில் வாழும் மைக்ரோ- கணுக்காலிகள் ஆகும்.
- இந்திய ஆராய்ச்சிக் குழுவால் முறையாக விவரிக்கப்பட்ட முதல் டிப்ளூரா இனம் இது ஆகும்.
- இதுவரையில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 17 டிப்ளூரா இனங்களும் வெளிநாட்டு விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டன.
- கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பதிவு செய்யப்படாத ஒரு அரிய கிளையினமான Lepidocampa juradii bengalensis-ஐயும் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் கண்டுபிடித்து உள்ளனர்.

Post Views:
69