TNPSC Thervupettagam

புதிய தொலைக்காட்சி மதிப்பீட்டுக் கொள்கை 2026

April 1 , 2026 7 days 112 0
  • பார்வையாளர்களின் அளவீட்டில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதிய தொலைக்காட்சி மதிப்பீட்டுக் கொள்கையை அறிவித்துள்ளது.
  • அதிக முகமைகளை அனுமதிக்கவும், இத்துறையில் போட்டியை அதிகரிக்கவும் நிகர மதிப்புத் தேவை ₹20 கோடியிலிருந்து ₹5 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • நியாயமான மற்றும் பாரபட்சமற்ற மதிப்பீடுகளை உறுதிப்படுத்த, வாரிய உறுப்பினர்களில் குறைந்தது 50% பேர் சுயேச்சையானவர்களாகவும், ஒளிபரப்பாளர்கள் அல்லது விளம்பரதாரர்களுடன் தொடர்பு இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • துல்லியமான தொலைக்காட்சி பார்வையாளர் தரவைச் சேகரிக்க, மீட்டர்கள் பொருத்தப் பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 80,000 ஆகவும், பின்னர் 1.2 லட்சமாகவும் உயர்த்தப்படும்.
  • உட்புற மற்றும் வெளிப்புற என இரட்டைத் தணிக்கை முறை அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.
  • தரவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முகமைகள் DPDP (டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு) சட்டம், 2023-ஐப் பின்பற்ற வேண்டும்.
  • 2014 வழி காட்டுதல்களுக்கு மாற்றாக அமையும் இக்கொள்கை நம்பகமான தொலைக் காட்சி பார்வையாளர் அளவீட்டு முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்