TNPSC Thervupettagam

புதிய நைட்ரஜன் உரம் - நீரற்ற அம்மோனியா

July 30 , 2026 3 days 64 0
  • நீரற்ற அம்மோனியாவை உரமாகத் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் இந்தியா மூன்று ஆண்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நீரற்ற அம்மோனியாவில் 82% நைட்ரஜன் உள்ளதுதோடு இது மிகவும் செறிவூட்டப் பட்ட நைட்ரஜன் உரங்களில் ஒன்றாக அமைகிறது, அதே சமயம் யூரியாவில் சுமார் 46% நைட்ரஜன் உள்ளது.
  • இது தீக்காயங்கள் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது அழுத்தத்தின் கீழ் சேமிக்கப்பட்டு சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மண்ணின் மேற்பரப்பிற்குக் கீழே செலுத்தப்படுகிறது.
  • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 மில்லியன் டன் யூரியாவை உற்பத்தி செய்கிறது, ஆனால் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 10 மில்லியன் டன்களை இறக்குமதி செய்கிறது.
  • தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ், பசுமை யூரியாவை உற்பத்தி செய்வதற்காக ஆண்டுதோறும் 7.24 லட்சம் மெட்ரிக் டன் பசுமை அம்மோனியாவைக் கொள்முதல் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்