புதிய பண வழங்கீட்டுத் தொகுப்பு நிறுவனங்களுக்கான ஒப்புதல்
February 15 , 2024 535 days 425 0
சோஹோ மற்றும் ஐஸ்பே மற்றும் டெசென்ட்ரோ ஆகிய நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியானது பண வழங்கீட்டுத் தொகுப்பு நிறுவன உரிமத்தினை வழங்கியுள்ளது.
முன்னதாக ஸ்ட்ரைப், சோமாட்டோ மற்றும் டாடா பே ஆகியவை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஒப்புதலைப் பெற்றன.
ரேசர்ப்பே மற்றும் கேஷ்ஃப்ரீ போன்ற பெரிய நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் உரிமம் பெற்றன.
இதுவரை, மொத்தம் 8 நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பண வழங்கீட்டு தொகுப்பு நிறுவனங்கள் உரிமத்தைப் பெற்றுள்ளன.
இந்த உரிமம் ஆனது, நிறுவனங்கள் ஆனது இயங்கலை வணிகங்கள் மற்றும் இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு பண வழங்கீட்டுச் சேவைகளை வழங்க அனுமதிக்கிறது.
இவை வணிகர்கள் சார்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்று, ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குப் பிறகு அவற்றை வணிகர்களுக்குப் பரிமாற்றுவதற்கு முன் அந்த கட்டணங்களைத் திரட்டி தொகுக்கும்.