TNPSC Thervupettagam

புதிய பனை இனங்கள்

August 21 , 2025 16 hrs 0 min 23 0
  • ஹார்டஸ் மலபாரிகஸ் ஆய்வுக் கட்டுரையின் மீள் பார்வை மூலம் இந்தியாவில் ஒரு புதிய பனை இனம் கண்டறியப்பட்டது.
  • 17 ஆம் நூற்றாண்டில் விவரிக்கப்பட்ட கட்டோ-இன்டெல் பனை, பீனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • பீனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் ஆனது கேரளா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டது மற்றும் 3.5 முதல் 5.5 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது.
  • கிழக்கு இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் பீனிக்ஸ் ராக்ஸ்பர்கி என்ற புதிய இனம் அடையாளம் காணப்பட்டது.
  • பீனிக்ஸ் ராக்ஸ்பர்கி 12 முதல் 16 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய, தனித்த தண்டு மற்றும் பெரிய பழங்களைக் கொண்டது.
  • இந்த ஆய்வு P. புசில்லா, P. ஃபரினிஃபெரா மற்றும் P. ஜெய்லானிகாவை பீனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் என மறுவகைப்படுத்தியது.
  • பீனிக்ஸ் ராக்ஸ்பர்கி என்ற இனத்தின் பெயர் தாவரவியலாளர் வில்லியம் ராக்ஸ்பர்க்கை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்