November 22 , 2025
5 days
38
- TRST01 ஆனது பிரேசிலில் நடைபெற்ற COP30 மாநாட்டில் பாரிசு உடன்படிக்கைக்கான ஒருங்கிணைந்தத் தளத்தை (PAIP) அறிமுகப்படுத்தியுள்ளது.
- உமிழ்வுத் தரவைக் கண்காணிக்கவும் சரி பார்க்கவும் வேண்டி PAIP ஆனது, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொடர் சங்கிலித் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.
- இது விவரப் பட்டியல், சரி பார்ப்பு மற்றும் சுழற்சியில் இருந்து கார்பன் வரவினை நீக்குதல் போன்ற உமிழ்வுப் பணிகளின் அனைத்து நிலைகளையும் இணைக்கிறது.
- அதன் புதிய சுற்றுச்சூழல் வள இருப்பில் இந்த தளத்தைப் பயன்படுத்திய முதல் நாடு மலாவி ஆகும்.
- இந்த அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கருவிகள், திறன் மிகு ஒப்பந்தங்கள், செயற்கைக் கோள் பகுப்பாய்வு மற்றும் இயந்திரக் கற்றல் ஆகியவை அடங்கும்.
- PAIP ஆனது வெளிப்படைத்தன்மை மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்துவதன் மூலம் பாரிசு உடன்படிக்கையின் கீழ் 6வது பிரிவின் செயல்படுத்தலை ஆதரிக்கிறது.

Post Views:
38