TNPSC Thervupettagam

புதிய பாதுகாப்பு உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்

August 25 , 2026 16 hrs 0 min 41 0
  • ₹3,070 கோடி மதிப்பிலான வணிகத் திறனைக் கொண்ட, உத்திசார் ரீதியாக முக்கியமான 405 பாதுகாப்பு உபகரணங்களை உள்ளடக்கிய 6-வது நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை (PIL) பாதுகாப்பு உற்பத்தித் துறை (DDP) அறிவித்து உள்ளது.
  • இதில் 389 உபகரணங்கள் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களுக்கானவை (DPSUs) மற்றும் 16 உபகரணங்கள் இந்தியக் கடலோரக் காவல்படைக்கானவை (ICG) ஆகும்.
  • இந்தப் பட்டியலில் Su-30MKI, இலகுரக போர் விமானம் (LCA), T-72, T-90 மற்றும் போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்படும் வரிசை மாற்றக்கூடிய அலகுகள் (LRU), துணை அமைப்புகள், உதிரிபாகங்கள், கூறுகளும் மற்றும் மூலப்பொருட்களும் அடங்கும்.
  • இந்த உபகரணங்கள் 'மேக்' நடைமுறைகள் மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மூலம் உள்நாட்டுமயமாக்கப்படும், பின்னர் அவை இந்திய விற்பனையாளர்களிடமிருந்து, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.
  • இறக்குமதிப் பதிலீடு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட SRIJAN பாதுகாப்பு இணையதளத்தில் இதற்கான விவரங்கள் மற்றும் காலக்கெடு கிடைக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்