February 14 , 2026
9 days
65
- தெலுங்கானாவின் பகால் வனவிலங்கு சரணாலயத்தில் "டிக்லிப்டெரா பகாலிகா" என்ற புதிய பூக்கும் தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்த இனம் வெப்பமண்டலப் பூக்கும் தாவரக் குழுவான அகந்தேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- டிக்லிப்டெரா இனத்தில் உலகளவில் 220க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன, அதில் இந்தியாவில் சுமார் 29 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இந்த இனத்தின் குறிப்பிட்ட இடப் பரவல் காரணமாக தற்போது IUCN வழி காட்டுதல்களின் கீழ் "போதிய தரவுகள் இல்லாதவை" என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
- "பகாலிகா" என்ற பெயர் சரணாலயத்தின் பெயர் பெற காரணமான பகால் ஏரியிலிருந்து பெறப்பட்டது.

Post Views:
65