TNPSC Thervupettagam

புதிய மகப்பேறு விடுப்பு விதி

August 20 , 2026 5 days 98 0
  • பெண் அரசு ஊழியர்கள் தங்களின் மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் என இருந்த முந்தைய வரம்பை மாற்றி, 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • முந்தைய விதியானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிருள்ள குழந்தைகளைக் கொண்ட பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களாக வரம்பிட்டிருந்தது.
  • இந்த புதிய முடிவின் மூலம் மூன்றாவது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு மீண்டும் வழங்கப்படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அடிப்படை விதி 101(A)-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, 12 வார விடுப்பு என்ற முந்தைய விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மாநிலத்தில் குறைந்து வரும் கருவுறுதல் விகிதம் மற்றும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த தமிழ்நாட்டின் கவலையைத் தொடர்ந்து இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்