புதிய மேம்பாட்டு வங்கியில் கொலம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான்
July 11 , 2025 161 days 168 0
கொலம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளானது புதிய மேம்பாட்டு வங்கியில் (NDB) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன.
இது NDB வங்கியின் உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையினை 11 ஆக விரிவுபடுத்தி உள்ளது.
இந்த NDB வங்கியில் தற்போதுள்ள உறுப்பினர்களில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, அல்ஜீரியா, கொலம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை அடங்கும்.
NDB ஆனது பிரிக்ஸ் நாடுகள் மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான மேம்பாட்டினை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வங்கியானது 2015 ஆம் ஆண்டில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பிரிக்ஸ் நாடுகளால் நிறுவப்பட்டது.