COP30 மாநாட்டிற்கு முன்னதாக, வெப்பமண்டல வனங்கள் பாதுகாப்பு மையத்தின் (Tropical Forest Forever Facility-TFFF) பார்வையாளராக இந்தியா இணைய உள்ளது.
TFFF ஆனது, ஆண்டுதோறும் பாதுகாக்கப்படும் காடுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 4 டாலர் வழங்குகின்ற ஒரு நடுநிலையான நிதி ஒதுக்கீட்டு இயற்கை நிதி மாதிரியை வழங்குகிறது.
முதலீட்டாளர்களின் பங்களிப்புகள் ஆனது, அதிகரித்து வரும் சந்தைப் பத்திரங்களுக்கு நிதியளிக்கவும் புதைபடிவ எரிபொருட்களைத் தவிர்க்கவும் வெப்ப மண்டல வன முதலீட்டு நிதியத்தால் (TFIF) நிர்வகிக்கப்படுகின்றன.
பிரேசில், இந்தோனேசியா, நார்வே, கொலம்பியா, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகியவை இந்த நிதிக்கு நிதி உதவி செய்துள்ளன.
இந்தியா 2005 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வுச் செறிவினை சுமார் 36% குறைத்து, 50% புதைபடிவமற்ற நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனை அடைந்துள்ளது.
2005 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் காடு மற்றும் மரப் பரவலின் விரிவாக்கம் ஆனது 2.29 பில்லியன் டன் CO₂ வாயுவிற்குச் சமமான கூடுதல் கார்பன் பிடிப்பு பகுதியை உருவாக்கியது.