தமிழ்நாட்டில் உள்ள வெப்ப தாங்கு திறன் மையம் ஆனது, ஐக்கியப் பேரரசு அரசாங்கத்தின் ரெசிலியன்ட் ஆசியாவிற்கான பருவநிலை நடவடிக்கையின் கீழ் தொடங்கப் பட்டது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வெப்பத் தணிப்பு தொடர்பான நடவடிக்கைகளை வழி நடத்த தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் உயர் தெளிவுத்திறன் கொண்ட வெப்பத் தாக்க வரைபடங்களை இந்த மையம் உருவாக்கும்.
பருவநிலை அறிவியலாளர்கள், நகர்ப்புற வெப்ப பொறியாளர்கள், புவியியல் தகவல் அமைப்பு (GIS) நிபுணர்கள் மற்றும் திட்டமிடுபவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நகரங்களுக்கான மாபெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் வெப்பத் தாக்க ஆபத்து மண்டலங்கள் சேர்க்கப்படும்.
எதிர்காலத் திட்டங்களில் நீர் சேமிப்பு அம்சங்கள் கொண்ட நகரங்கள் (sponge cities), நீர் சார்ந்த குளிரூட்டும் உள்கட்டமைப்பு, சதுப்புநில சூழல்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்கான பல்லுயிர்ப் பெருக்கக் குறியீடு ஆகியவை அடங்கும்.
இந்த முன்னெடுப்பில் தமிழ்நாடு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் உலக வள நிறுவனம் (WRI) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு அடங்கும்.